அதிரையில் அரசு பள்ளி ஆண்டு விழாவை எடுத்து நடத்திய இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர்!(படங்கள் இணைப்பு)

அதிரை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது 2ம் நம்பர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இந்த பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. 

முன்னதாக வந்து இருந்த அனைவரையும் பள்ளி அசிரியை வரவேற்றார். பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மேலும் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இஸ்லாமிய ஜனநாயக முன்னணி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இஸ்லாமிய ஜனநாயக முன்னணி அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெஹபர் சாதிக் (அதிரை ராஜா) அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மேலும் மாவட்ட நிர்வாகி ராஜிக், செல்ல ராஜா மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் அன்சாரி, முகைதீன் (பீச் முகைதீன்) ,சாதிக்,மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதியாக பள்ளி தலைமை ஆசிரியை அவர்கள் வந்து இருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

Advertisement

Close