இறையற்புதம்

நிலவிட்  சூழும்  எழிலைப் பாரு
நினைவிட் சேரும் இறையாசை
மலரிட் கூடும் மகரஞ் சேர
மலருந் தேனும் அருளாகும்
இரையைத் தேடும் பறவை போகும்
இறையைப் பாடும் இனிதாக
கரையைத் தாவும் கடலுக் காக
கடவுட் போடும் வினைபாரு
இருளிற் றானே ஒளியைத் தூவும்
இயல்பைத் தந்த இறையாகும்
அருளைச் சூழ அவனைப் பாடு
அறிவைத் தேடு நிறைவாகும்
அணுவைச் சேர உடலைக் கூடி
அழகுச் சேயும் உருவாகும்
அணுவைக் கூட எவருக் கும்தான்
அசைவைக் காண அவன்வேண்டும்
“கவியன்பன்” கலாம்

Close