அதிரை APL கிரிக்கெட் தொடர்- இன்றைய முடிவுகள்

அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC)  நடத்தும் பத்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 18/04/2015 அன்று நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் நடைபெற்றது. கிரிக்கெட் பந்தில் நடைபெறும் இத்தொடரில் அதிரை அணிகள் உட்பட மாவட்ட அளவிலான தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.

முதல் நாளான இன்று இரண்டு 20 ஓவர் போட்டிகள் நடைப்பெற்றன.

முதல் போட்டியில் தஞ்சை அருண் நெட்ஸ் அணியை எதிர்த்து அதிரை PCC அணி விளையாடியது. இதில் தஞ்சை அருண் நெட்ஸ் அணி 56 ரண்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

பகல் நடைப்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் அதிரை சிட்னி ஃபிரண்ட்ஸ் அணியும் அதிரை ASC அணியும் மோதின. இதில் அதிரை ASC அணி வெற்றி பெற்று நாக் அவ்ட் சுற்றுக்கு முன்னேறியது.

முதல் பரிசு: 30,000
இரண்டாம் பரிசு: 20,000
மூன்றாம் பரிசு: 10,000
நான்காம் பரிசு: 10,000

அதிரை APL கிரிக்கெட் தொடர் குறித்த தினசரி பதிவுகளுக்கு இணைந்திருங்கள் அதிரை பிறையுடன்.

Advertisement

Close