அதிரையில் சிறப்பாக நடைபெற்று வரும் அம்மா திட்டம் சிறப்பு முகாம்!(படங்கள் இணைப்பு)

அதிரையில் இன்று காலை 10.00 மணி முதல் வருவாய் துறை சார்பாக அம்மா திட்டம் சிறப்பு முகாம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்று வருகிறது.இந்த முகாமில் குடும்ப அட்டை பெயர் மாற்றுதல்,சேர்த்தல், வீட்டுமனை பட்டா,பட்டா மாறுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்றவை சரிசெய்து அங்கேயே உடனடியாக வழங்கப்படுகிறது.

இந்த முகாமில் பேரூராட்சி துணை தலைவர் A.பிச்சை,நகர கூட்டுறவு வங்கி தலைவர் K.ராமராஜ்,நகர கூட்டுறவு துணை தலைவர் M.A.முகம்மது தமீம், நகர பாசறை செயலாளர் அபுதாகிர், கவுன்சிலர்கள் ஹாஜா முகைதீன்,சிவகுமார்,அப்துல் லத்திப்,N.அபுதாகிர்,C.விஜயரத்தினம் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,மேலும் இவர்கள் பொது மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்கள்.

     

Advertisement

Close