நடவடிக்கை எடுக்குமா அதிரை மின்சாரிய வாரியம்?

அதிரை பிலால் நகர் செடியான் குளம் எதிரில் கடந்த 5 மாத காலமாக மின் கம்பம் ஒன்று மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளது. இது பற்றி பல முறை மின்சாரிய வாரியத்திடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
மேலும் இந்த மின் கம்பம் அருகில் ஒரு டவர் ஒன்று உள்ளது.இந்த மின் கம்பம் விழுந்தால் பெரும் அசம்பாவிதம் எதும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.எனவே அபாயம் ஏற்படும் முன் மின் கம்பத்தை சீரமைக்க மின் வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
Advertisement