முடியாது என்பது முயலாதது என்பதற்கு உதாரணம்!தனது அண்ணனின் சிகிச்சை செலவுக்காக ரூ.15 லட்சம் சோ்த்த 5 வயது சிறுமி!

மாற்றுத் திறனாளியான தனது 7 வயது அண்ணனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தெருவில் எலுமிச்சம் ஜூஸ் விற்று ரூ.15 லட்சம் ரூபாயை  5 வயது  சிறுமி சேர்த்துள்ளார். அமெரிக்காவின் டொரொண்டோ நகரை சேர்ந்த நாடாவ் என்ற சிறுவனுக்கு இரண்டு வயதானபோது ஏஞ்சல்மேன் சிண்ட்ரோம் என்ற நரம்பு  மண்டலத்தை பாதிப்படைய வைக்கும் கொடிய நோய் தாக்கியது. நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மூளையின் செயல்திறனும் பேச்சுத்திறனும் தடைப்பட்டது. நாடாவுக்கு  சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாததால் அவனது பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.

இந்த சோகத்தை பகிர்ந்துக் கொள்வதோடு மட்டுமின்றி, அதை தீர்க்கும் வழியையும் தேடி தங்களது பெற்றோர் நடத்திவரும் தெருவோர கடையில் கோடைக் காலத்தில்  எலுமிச்ச ஜுஸ், குளிர்காலத்தில் சூடான சாக்லேட் பானங்களையும் விற்று தனது அண்ணனுக்காக நாமா உஸான் சுமார் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்களை சேர்த்துள்ளார்.  இந்த சிறுமிக்காகவே அந்த தெருவோரக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் ஒருவர் 20 ஆயிரம் டாலர்களை நாடாவின் சிகிச்சை செலவுக்கு நிதியாக உதவியுள்ளார்.

நன்றி:தினகரன் 

Advertisement

Close