இஸ்லாமிய பெற்றோர்களே! உங்கள் கவனத்திற்க்கு! (அதிரை தெவ்ஃபிக் அஹமது)

என்ன படிக்கலாம்?

அன்பார்ந்த இஸ்லாமிய பெற்றோர்களே, இளைஞர்களை மற்றும் மாணவத் தோழர்களாகிய உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டகட்டுமாக.

 உங்கள் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுதிமுடித்திருக்கும் நிலையில் என்ன படிக்கலாம் என்று சிந்தித்திருக்கும் வேளையில் அவர்கள் அடுத்து படிக்க இருக்கும் துறை அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. இச்சமயத்தில் நம் சமுக சிந்தனைகளை கொண்டு நம்  தேர்வு செய்ய வேண்டும்.

  நம் சமுதாயத்தில் எந்தவித குற்றம் செய்யாமல்  பல வருடம் பல சகோதர்கள் விசாரணை கைதியாக  சிறைத்தண்டனை  அனுபவித்து வருகின்றனர், எத்தனையோ கிரமங்களில் மருத்துவசதி இல்லாமல் பல ஏழை குழந்தைகளும், கற்ப்பிணி பெண்களும் நம் கண்முன்னே மடிந்து வருகின்றனர் , நீதிக்கு சொந்தக்காரர்கள் என்றால் பெருமை அது இஸ்லாமியர்கள்தான் ஆனால் இன்று நம்  நீதித்துறையிலும், காவல்துறையிலும், அரசுத்துறையிலும் பின் தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

இதைவிட முக்கியமாக தீவிரவாதிகளாகவும், அடிமைவாதிகளாகவும் சித்தரிக்கும் ஊடகத்துறை இத்தனை அடக்குமுறைகளும் நம் முஸ்லிம் சமுதாயத்தின் மீது! இந்த அடக்குமுறைகளையும்! ஒடுக்கமுறைகளையும்! இன்றைய காலக்கட்டத்தில் அழிக்க வேண்டும் என்றால் மிக முக்கியமான ஆயுதம் கல்விதான். இந்த கல்வியை நாம் எப்படி பார்க்கிறோம் பணம் சம்பாதிக்கும் கருவியாக தான் ஆனால் இன்று நம்முடைய சமுகத்தில் உள்ள மாணவர்கள் சிறந்த  மருத்துவராக, மாவட்ட ஆட்சியாளராக, காவல்துறை அதிகாரிகளாக, வழக்கறிஞராக, ஊடகத்துறை வல்லுநராக மாற இருக்கிறர்கள் ஆனால் அவர்களின் பெற்றோர்கள் மாணவர்களின் கணவிர்க்கும் படிப்பிருக்கும் முற்றுபுள்ளி வைக்கும் நிலைமையை தான் இன்று பார்க்கிறோம்

நம் சமுதாயம் மாற்றம் அடைய வேண்டும் என்றால் பெற்றோர்கள் கையில் தான் உள்ளது சமுக அக்கறைவுடன் நம் பிள்ளைகளுக்கு கல்வியை அமைத்து கொடுப்பது நம் கடமையாகும் இதன் முலம் நம் சமுதாயத்தை வெற்றியின் பக்கம் அழைத்துச்செல்வோம்! 
        
  நம் சமுதாயம் மாற்றம் காண வேண்டும் என்றால் மாணவ சமுகதிடமே உள்ளது இன்று நம் மாற்றம் கண்டால் மட்டுமே நாளைய சமுகத்தை கட்டி அமைக்க முடியும். 
மாணவர்களை சமுக அக்கறை கொண்டு நாம் என்ன பாடிக்கலாம் என்பதனை சிந்தித்து நம் படிப்பை தேர்வு செய்யவேண்டும் 

இன்று மாற்றம் கண்போம் !
நாளை  தலைசிறந்த சமுகமாக 
தலை நிமிர்ந்து நிற்போம்! 
                
 இப்படிக்கு,
எஸ்.தெவ்ஃபிக் அஹமது                 

Advertisement

Close