புதிய பொலிவுடன் அதிரை கூட்டுறவு நகர கடன் சங்கம் லிட்!(படங்கள் இணைப்பு)

அதிரை பழஞ்செட்டி பேருந்து நிறுத்தம் எதிரில் இயங்கி வருகிறது கூட்டுறவு நகர கடன் சங்கம் லிட் .இந்த சங்கம் 1960 முதல் இயங்கி வருகிறது .இந்த சங்கம் சொந்த இடத்தில் இயங்கி வருகிறது.மேலும் இந்த சங்கம் தற்போது புதுப்பிக்கப்பட்டு புதிய பொலிவுடன் இயங்கி வருகிறது.

தற்போது புதிய பாதுகாப்பு பெட்டக வசதி, பாதுகாப்பு கதவுகளுடன் கூடிய பாதுகாப்பு அறை, நவீன வங்கிக் கூடங்கள், சிறந்த உட்கட்டமைப்பு வசதி, பொலிவுடன் கூடிய  வெளிப்புறத் தோற்றம், குளிர்சாதன வசதி, இருக்கை வசதி போன்றவை ரூ.9.5 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த கூட்டுறவு நகர கடன் சங்கத்தின் தலைவர் கே.ராமராஜ், துணை தலைவர் எம்.ஏ.முகமது தமீம் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலையில் வேலைகள் அனைத்தும் நடைபெற்றன.

Advertisement

Close