அதிரையில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் குருகத்தி அணியினர் வெற்றி!

அதிரை  BSC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நேற்று (08-04-2015) முதல் பிலால் நகர் கிராணி மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் 15க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்து கொண்டன.

இந்த போட்டியின் இறுதி ஆட்டம் இன்று மாலை நடைபெற்றது .இதில் அதிரை ASC அணியினரும்,குருகத்தி அணியினரும் மோதினர்.பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் குருகத்தி அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசு ரூ.5,000 தட்டி சென்றனர்.இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை அதிரை  ASC அணியினரும்,முன்றாம் இடத்தை ESC அணியினர் பிடித்தனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு  BSC நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு அதிரை பிறை வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.    

Advertisement

Close