அதிரை அருகே நடந்த சாலை விபத்தில் சிறுவன் பலி!

அதிரை அருகே உள்ள மருதங்காவயலை சேர்ந்த செபஸ்தியன் இவரது மகன் அர்னால்ட் ஜான்சன் (வயது 9).இந்த சிறுவன் இன்று காலை 8.00 மணியளவில் தனது பாட்டியாருடன் அதிரை மருத்துவமனைக்கு வருவதற்காக கொள்ளுக்காடு பேருந்து நிறுத்தம் அருகில் சாலையை கடக்க முயன்றான்.

அப்போது நாகப்பட்டினம்-தூத்துக்குடி சென்று கொண்டு இருந்த ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக அந்த சிறுவன் மீது மோதியது.இதில் அந்த சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது.உடனே அருகில் இருந்தோர் அந்த சிறுவனை அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தான். சிறுவனின் உடல் இன்று மதியம் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலும் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சிறுவனின் இறந்த செய்தி கேட்டு அவனின் பெற்றோர் அழுத அழுகை அங்குள்ள அனைவரையும் கண் கலங்க வைத்தது.      

Advertisement

Close