அதிரையில் உதயமானது மெக் ஹோண்டா ஷோரூம்!(படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த சில வருடங்களாக மோட்டார் பைக்குகளில் ஷோரூம்கள் அதிகரித்து வருகின்றன. டி.வி.எஸ், பஜாஜ், யமாஹா, ஹீரோ போன்ற முன்னணி நிறுவனங்கள் அதிரையை நாடி ஷோரூம்களை திறந்து வருகின்றனர்.

இதனையடுத்து முன்னணி மோட்டார் பைக் நிறுவனமான மெக் ஹோண்டா ஷோரூம் இன்று (08-04-2015) காலை 10.30 மணியளவில் அதிரை ஜாவியால் ரோட்டில் உள்ள பஜாஜ் ஷோரூம் அருகில் உதயமானது.  இந்நிறுவனத்தை மீனாட்சி சந்திரசேகரன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி சேர்மன் திரு.C.சுந்தரபாண்டியன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

மேலும் திறப்பு விழாவிற்கு வந்து இருந்த அனைவரையும் திரு.S.வெங்கடேஷ் (நிர்வாக இயக்குனர்,மெக் ஹோண்டா, கும்பகோணம்), திரு.M.சுப்பிரமணியன் (நிர்வாக இயக்குனர்,மெக் ஹோண்டா,தஞ்சாவூர்) மற்றும் ஊழியர்கள் அன்புடன் வரவேற்றனர்.

புதியதாய் உதயமாகி இருக்கும் மெக் ஹோண்டா நிறுவனம் சிறந்து விளங்க அதிரை பிறை வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.

Advertisement

Close