துபாய் கிரிக்கெட் தொடரில் வென்று அசத்திய அதிரை அணியினருக்காக நடைப்பெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியின் நெகிழ்ச்சியான படங்கள்!

துபாயில் AUTO TRADER வழங்கும் முதலாம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி (06-02-2015) அன்று துவங்கியது.

இந்த தொடர் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 20 அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் நமதூர் அதிரை பாய்ஸ் அணியும் கலந்துக்கொண்டு விளையாடியது. பல தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் கலந்துக்கொண்டு விளையாடிய இத்தொடரில் அதிரை அணி மிகச் சிறப்பாக ஆடி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

இறுதிப்போட்டி உம்முல் குய்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் அதிரை ABCC அணியும் AUTO TRADERS அணியும் மோதினர். இதில் வெற்றி பெற்று AUTO TRADERS வெற்றிக் கோப்பையை அதிரை ABCC அணி கைப்பற்றி அசத்தியது. இதனை அடுத்து இந்த போட்டியின் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி துபாயில் நடைப்பெற்றது. இதில் சாம்பியனாக அதிரை பாய்ஸ் அணியினருக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. இதில் கோப்பையை பெற்ற அதிரை வீரர்களின் உற்சாகமான படங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளன.

 கடல் கடந்து சென்று தங்களின் கடும் வேலைகளுக்கு மத்தியில் தங்களின் கிரிக்கெட் திறமையால் அதிரைக்கு பெருமை தேடித் தந்த நமதூர் வீரர்களுக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement

Close