அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற ஆங்கில இலக்கிய மன்ற ஆண்டு விழா!(படங்கள் இணைப்பு)

காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற ஆண்டு விழா இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் டாக்டர்.A.ஜலால் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள்.வந்து இருந்த அனைவரையும் வரவேற்கும் விதமாக காதிர் முகைதீன் கல்லூரி ஆங்கில துறை மாணவர் P.ராம்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். 

இதனையடுத்து காதிர் முகைதீன் கல்லூரி ஆங்கில துறை தலைவர் டாக்டர்.A.முகம்மது முகைதீன் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் டாக்டர்.T.மார்க்ஸ் (PROFESSOR OF ENGLISH,PONDICHERRY CENTRAL UNIVERSITY) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் ஆங்கில துறை சார்பாக நடத்தப்பட்ட ஆங்கிலப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி-வினா, எழுத்துப் போட்டி, வாசித்தல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை சிறப்பு விருந்தினர் அவர்கள் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியினை ஆங்கில துறை மாணவர் M.முகம்மது ஹம்ஸா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.இறுதியாக ஆங்கில துறை மாணவி M.கிருத்திகா நன்றியுரை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், அலுவலக பணியாளர்கள் மற்றும் இணையதள நிர்வாகிகள்  கலந்துகொண்டனர் .

Advertisement

Close