அதிரையில் எந்நேரமும் பூட்டிக் கிடக்கும் VO அலுவலகம்!

தற்போது அரசால் புதிது புதிதாக திட்டங்கள் மாற்றப்பட்டு அதற்க்கான ஆவணங்களை வழங்க உத்தரவிடப்பட்டு வருகிறது. தற்பொழுது வாக்காளர் அடையாள அட்டை புதுப்பிக்கும் பணியும் வாக்களர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை இணைக்கும் பணியும் நடைப்பெற்று வருகிறது.

இதற்காக மக்கள் அங்கும் இங்கும் அலைந்து வருகின்றனர். பெரும்பாலான வார்டுகளை சேர்ந்த மக்கள் ஆவணங்களை எங்கு சமர்பிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும் வாக்காளர் அடையாள அட்டை விண்னப்பித்தவர்கள் வாக்காளர் அட்டையை வாங்குவதற்காக VO அலுவலகம் சென்றால் பெரும்பாலான நேரம் அலுவலகத்தில் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இனி வரும் நாட்களில் பொதுமக்களின் நலன் கருதி VO அலுவலர் அவர்கள் வேலை நேரங்களில் அலுவலத்தில் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

Close