Advertisement

' />

மதுக்கூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி!

மதுக்கூரில் நேற்று (3-4-2015) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி சமூக ஆர்வலர் சகோதரரர் தங்கப்பா என்கிற A ஜெகபர் சாதிக் அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சகோதரர், Y அன்வர் அலி (அதிரை) அவர்கள் “இறைவனுக்கு இணைவைத்தால் நிரந்தர நரகமே” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். வழக்கம் போல் இந்நிகழ்ச்சிக்கும் ஆண்களுக்கு வெளியில் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Close