டாக்டர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அமீரகத்தில் பாராட்டு விழா!(படங்கள் இணைப்பு)

பாராளுமன்றத்தில் சிறந்த பணி செய்தமைக்காக அமெரிக்க தமிழ் பல்கலைகழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு உறுப்பினரும்,
சர்வதேச காயிதேமில்லத் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான M.அப்துல்ரஹ்மான் Ex.MP.அவர்களுக்கு பாராட்டு விழாவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளரும், பதிப்பக அறக்கட்டளையின் செயலாளருமான மில்லத் S.B.முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு வரவேற்பு விழாவும் அமீரக காயிதேமில்லத் பேரவை சார்பில் அபுதாபியில் நடைபெற்றது.
பேரவையின் துணைத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்க்கு அபுதாபி தொழிலதிபர் லால்பேட்டை முஹம்மது அலி முன்னிலை வகித்தார்.திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் வஃபாத்தான பள்ளபட்டி மக்தூமிய்யா அரபிக்கல்லூரி பேராசிரியர்களுக்கு இரங்கல் தெரிவிக்கபட்டது.அவர்களின் மறுஉலக நல்வாழ்விற்க்கு சென்னை காதர் மீரான் ஃபைஜி துஆச் செய்தார்.
பேரவையின் அபுதாபி மண்டல மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை A.S.முஹம்மது அன்சாரி வரவேற்புரை நிகழ்த்த அமைப்புச் செயலாளர் லால்பேட்டை மௌலவி அப்துல்ரஹ்மான் துவக்கவுரை நிகழ்த்தினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச்செயலாளரும், பதிப்பக அறக்கட்டளை செயலாளருமான மில்லத் S.B.முஹம்மது இஸ்மாயில்,
பேரவையின் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா, பொருளாளர் ஹமீதுர்ரஹ்மான்,துணைத் தலைவர் வழக்கறிஞர் இஜாஸ் பேக், அலுவலக பொருப்பாளர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு உறுப்பினரும்,சர்வதேச காயிதேமில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் M.அப்துல்ரஹ்மான் Ex.MP.அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.பேரவையின் உறுப்பினர் கொள்ளுமேடு மௌலவி முஹம்மது ஹாரிஸ் நன்றி கூற திட்டச்சேரி ஜாஃபர் சாதிக் ஃபைஜி துஆவுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.காயிதேமில்லத் பேரவை உறுப்பினர் லால்பேட்டை சல்மான் பாரிஸ் நிகழச்சியை தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் அய்மான் சங்கத்தின் பொருளாளர் கீழை ஜமாலுத்தீன்,IMF முன்னாள் தலைவர் ஷர்ஃபுத்தீன் ஹாஜியார், பேரவையின் ஊடகத்துறை செயலாளர் சாதிக், ஊடக ஒருங்கிணைப்பாளர் கீழை SKV ஷேக்,முஸஃப்பா பகுதி செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், திருச்சி பைஜுர் ரஹ்மான், மொய்தீன் ஹாஜியார், திண்டுக்கல் ஷேக் ஃபரீத், முஹம்மது ஹாரிஸ்,கீழை ஃபஹ்ருல் பயாஜ், லால்பேட்டை அஸ்கர் அலி மற்றும் பல்வேறு ஊர் ஜமாஅத்களின் நிர்வாகிகள், சமுதாயப் பிரமுகர்கள் ஆகியோர் திரளாக கலந்துக் கொண்டனர்.

Advertisement

Close