Adirai pirai
articles posts

சொல்லிலும் செயலிலும் இஸ்லாத்தைக் கலப்போம்..!சமூக உறவில் சகோதரத்துவத்தை வளரப்போம்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
இந்த உலகில் இருக்கும் அனைவருமே ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், சமயத்தில் அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாமல் குழம்புகிறோம். இத்தகைய குழப்பங்களால் உடல் மற்றும் மனதில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சொல்லப்போனால், வாழ்க்கையே சிலருக்கு வெறுமையாகிவிடும். இத்தகைய வெறுமை ஏற்பட்டால், எப்படி உலகில் வாழ வேண்டுமென்ற ஆசை ஏற்படும். எனவே மனதை லேசாகவும், சந்தோஷமாகவும் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
சிலர் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கிறேன் என்ற பெயரில் தவறான வழியில் சென்றுவிடுகின்றனர். அவ்வாறு சென்ற பின்னர் அதிலிருந்து மீள்வதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஆகவே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர், நாம் செய்வது நல்லது தானா என்பதை உறுதிபடுத்திக் கொண்டு, பின்னர் செயல்பட்டால் வாழ்க்கையே சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். 
அமைதியில்லாத உள்ளத்தில் அழகான மென்மையான எண்ணங்களுக்கிடமில்லை. எந்தப் பிரச்சினையையும் என்னால் எதிர்த்துப் போராட முடியும்” என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அச்சம் விலகும் அந்த மனத்தைரியத்தில் ஒரு அமைதி மனதில் ஏற்படுவதை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.
மன அமைதி ஏற்படும் போது மிகுந்த நிதானத்துடன் அன்றாட வேலைகளை திருப்தியுடன் செய்து முடிக்க முடியும். அமைதியாக உறங்கவும் சாப்பிடவும், நண்பர்கள் உறவினர்களுடன் இனிமையாக பழகவும் முடியும்.
தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெற முடியும்
தன்னம்பிக்கை உள்ளத்தில் வளர்த்துக் கொண்டு, பிறருடன் பேசும் பொழுது, பேசுபவரது கண்களை நேருக்கு சேர் சந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். 
தன்னம்பிக்கை உடையவர்களுக்கு…வெற்றியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.
தன்னம்பிக்கை என்பது உயிர் மூச்சாகும். உயிரில்லாதவன் பிணத்திற்கு 
சமம் என்பதுபோல் தன்னம்பிக்கை இல்லாதவன் 
உயிரற்ற ஜடத்திற்கு இணையாக கருதப்படுவார்கள்.
நாம் எப்போதும் நம்மை ஒரு வெற்றியாளனாக அடையாளப் படுத்திக்கொள்வதோடு எந்த வொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையை முக்கியமாக முதன்மைப்படுத்திக்கொள்வது நம்மை தன்னம்பிக்கையாளராக மாற்றும் வலிமை படைத்தது….
ஆர்வத்துடன் தினமும் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு அறிவையும், செயல் திறமையையும் வளர்த்துக்கொண்டு வருவது மிகவும் அவசியம் !
மண்ணுக்குள் புதைத்தாலும் விண்ணை நோக்கி வளரும் வேகத்துடன்  மண்ணைப் பிளந்து வெளியேறும் விதைக்குள்  இருப்பது  தன்னம்பிக்கை.!!
உறவுகளிடம் எடுத்து சொல், புரிய வைத்து உன் வழிக்கு கொண்டு வா அல்லது ஏற்றுக்கொண்டு அவர்கள் வழியில் செல்வது மனதிற்கு அமைதி தரும்.. 
மனிதர்கள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். தற்கால மனிதர்களின்  மனம் மிகச் சிறிய தோல்வியைச் சந்தித்தால் கூட துவண்டு நம்பிக்கை அற்றுப் போகின்றது. துன்பங்களில் ஈடுபடுவதை மனித மனம் அடிப்படையில் விரும்புகின்றது. துன்பத்தின் துவளுதல் காரணமாக செயலற்றுப் போவதை மனித மனம் விரும்புகின்றது. இந்தத் துன்ப விருப்பத்தில் இருந்து மனித உள்ளத்தை மீட்டுக் கொண்டு வரவேண்டும். துன்பத்தால் செயலற்றுப் போகும்; மனத்தை அதன் இயல்பிலிருந்து மாற்றி எப்போதும் செயல்படும் மனமாக நிலைக்க வைக்கவேண்டும்.
எதைக்கண்டும் பிரமிக்காதேபிரமிப்பைப்போல்ஒரு பின்னடைவே கிடையாது !தோல்விஎன்பது சிந்திக்கத்தெரியாதவனின்சித்தாந்தம் !
இளைஞனேஇரைப்பையையும்நம்பிக்கையையும்காலியாக விடாதே !நடக்குமாஎன்ற கேள்வி-உன்நம்பிக்கைக்கோபுரத்தின்அத்திவாரத்தில் விழுந்த கடப்பாறை !
மனத் தெளிவும், அமைதியுமான உள்ளமும் அழகின் முதல் படியாகும். திருப்தியான உள்ளம் அமைதியை ஏற்படுத்தும். எனவே மன அமைதியைத் தேட முயற்சி செய்யுங்கள். உங்களைப் பற்றி அழகான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். நல்ல மென் உணர்வுகளை கொண்டிருங்கள். அதுவே உங்கள் முகத்திலும் உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
இன்ஷா அல்லாஹ்…

Advertisement