சவூதி அரேபியா, அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் கடும் புழுதி காற்று!(பல புகைப்படங்கள்)

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று காலை முதல் கடும் புழுதி காற்று வீசி வருவதால் அபுதாபி,துபாய், ஷார்ஜா என பல்வேறு நகரங்களில் மணல் சூழ்ந்து பனி மூட்டம் போன்று வெளிச்சம் குறைவாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

மேலும் மக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டதோடு  கட்டிட பணிகள், சாலையின் நடைபெறும் பணிகள் உள்ளிட்டவைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. புழுதி காற்றால் எதிரே வரும் வாகனங்கள் பார்வைக்கு தெளிவாக தெரியததால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏராளமான விமானங்கள் புறப்படுவதிலும், தரை இறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

புகைப்படங்கள்:துபாய்

Advertisement

Close