அதிரை பேரூராட்சியின் செயல்பாடுகள் குறித்து IDMK வின் கண்டன அறிக்கை!

Want create site? Find Free WordPress Themes and plugins.

இதுகுறித்து ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான அதிரை M.M.இப்ராஹிம் அவர்கள் கூறியிருப்பதாவது…

அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் அனைத்து தெருக்களிலும் உள்ள குப்பைகளை அள்ளுவது கிடையாது.

சாக்கடை கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் ரோடுகளில் கழிவு நீர் தேங்கிக் கிடப்பதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல அவதிகளுக்கு ஆளாகிறார்கள்.

அதிரை பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் குளங்களில் மீன் வளர்ப்பதாக போடப்படும் பொருட்கள் சுகதாரமற்றதாக உள்ளதால் குளங்களில் துர்நாற்றம் ஏற்படுவதுடன் அதனை சுற்றுலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு பலவிதமான வியாதிகள் ஏற்படுகின்றன.

அதிரை பெருநகர் முழுவதும் கழிவுநீர் தேங்குவதால் டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற மனிதர்களை கொள்ளக்கூடிய நோய்களை ஏற்படுத்தும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அரசு மருத்துவமனை அருகில் இருக்கும் பள்ளதாக்கில் உணவுக்காக அறுக்கப்படும் கோழிகளின் கழிவுகள் கொட்டப்படுவதால் அருகில் உள்ள பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு சுகாதாரக் கேடு விளைகிறது.

அதிரை பேரூராட்சி 16 வது வார்டில் உள்ள செழியன் குளத்தில் பலதரப்பட்ட மக்கள் காலை நேரத்தில் குளிக்கிறார்கள். இதனை சரியாக பராமரிக்காத காரணத்தால் கழிவு நீர் குளத்தில் கலந்து குளிக்கும் மக்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது.

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால் அவசர நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழப்பு ஏற்படுகின்றது. பகல் நேரங்களிலும் நோயாளிகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை. ஆஸ்த்துமா, வேறி நாய்கடி போன்றவற்றுக்கு சரியான மருந்துகள் இல்லாதநோயாளிகள் அவதிக்கு ஆளாகின்றனர்.

15  வது வார்டு கீழத்தெருவில் உள்ள செய்னாங் குளத்தில் உள்ள குளத்தை சுத்தப்படுத்த நபார்டு நிதி உதவியின் கீழ் குளத்தை புதுப்பிக்கும் பணிக்காக 50,00,000 மதிப்பீட்டில் ஒப்பந்தம் விடப்பட்டது. 25% சதவீத வேலைகள் முடிக்கப்பட்டது. மீதி வேலைகள் நடைப்பெறாமல் பாதியிலேயே நிறுத்தப்படுப்பட்டு இன்று வரை தொடங்கப்படவில்லை. ஒப்பந்தக்காரர் திரு.வீரையன் அவர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டதற்க்கு வேலைகள் முற்றிலும் முடிந்துவிட்டதாக கூறினார். ஆனால் குளத்தை சீரமைக்கும் மதிப்பீட்டில் உள்ள வேலைகள் முற்றுமாக முடியவில்லை. ஐயா அவர்கள் குளத்தை ஆய்வு செய்து வேலைகளை முடித்துத் தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேற்கண்ட முறைகேடுகளை பேரூராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு பலமுறை தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்படிக்கு,
M.M.இப்ராஹிம்,
நிறுவனர்&தலைவர்,
இந்திய தேசிய மக்கள் கட்சி.

இதுகுறித்து இப்ராஹிம் அவர்கள் அதிரை பிறைக்காக வழங்கிய பிரத்யேக பேட்டியும் முறைகேடுகளுக்கான ஆதாரங்களும் விரைவில் பதியப்படும்.

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author