அமேரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்றார் அப்துல் ரஹ்மான் M.A. Ex.MP!

முஸ்லிம் லீக் சார்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வேலூரில் வெற்றி பெற்ற அன்பு சகோதரர் அப்துல் ரஹ்மான் Ex. MP. அவர்களுக்கு அமெரிக்கா உலக தமிழ் பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் இன்று கொடுக்கப்பட்டது.

இன்டியா டுடே பத்திரிகையில் சிறப்பாக செயல்படும் எம்பிகள் பட்டியல் அறிவித்த போது இந்தியாவில் மொத்தம் 543 எம்பிகள் நமது அப்துல் ரகுமான் அவர்கள் 6ம் இடம் பிடித்திருந்தார். தமிழ்நாட்டில் எம்பிக்கள் வரிசையில் முதல் இடம் பெற்று இருந்தார்.  இன்னும் உங்கள் சமூக பணி தொடரட்டும்.

எடிட்டர் அலாவுதீன்.

அறிவுச்சுடர் அண்ணன் அப்துர் ரஹ்மான் M.A., M.P (Ex.) அண்ணன் அவர்களுக்கு அமெரிக்கா தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் (டாக்டர்) பட்டம் வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அண்ணன் அவர்கள் மென்மேலும் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பாக மனமாற வாழ்த்தி துஆ செய்கின்றோம்.

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ மற்றும்  மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ – தலைவர்  மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., – பொதுச் செயலாளர்  மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.

முத்துப்பேட்டை அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் M.A.    Ex. MP. அவர்களுக்கு அமெரிக்கா  உலக  தமிழ் பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் நேற்று 29ந் தேதி மதுரையில் கொடுக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லீம்லீக் சார்பில் வேலூரில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்றத்திற்கு சென்று இந்திய முஸ்லீம்களுக்காக  மிகச் சிறப்பாக பணியாற்றினார்.

இவரின்  இந்த சீரிய பணி மென்மேலும் தொடர்ந்து பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிட அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Advertisement

Close