அதிரையில் 24 மணி நேர மருத்துவ வசதியை ஏற்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்த அதிரையர்கள்!(படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

சமீப காலங்களில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை எடுத்துக் கொண்டால் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. மேலும் இது போன்ற விபத்துகளில் அதிகம் இரவு நேரங்களில் தான் நடக்கின்றன. இந்த விபத்துகளில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தால் பட்டுக்கோட்டை, தஞ்சை போன்ற பிற ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதற்குள் காயமடைந்தவரின் உயிர் பிரிந்து விடும் துயர நிலை தொடருகிறது. 

மேலும் இரவு நேரங்களில் ஒருவருக்கு திடீர் என்று உடல் முடியாமல் போனால் முதலுதவிக்கு கூட இரவு நேர மருத்துவமனை என்று ஒன்று இல்லாமல் இருந்து வந்தது.  இதனை அடுத்து அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ வசதியை ஏற்படுத்தி தர வேண்டி பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம் அவர்களின் தலைமையில் இன்று (30-03-2015) காலை 9.00 மணியளவில் 12 வேன்களில் அதிரையில் உள்ள அனைத்து தெருவாசிகள் திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.இதற்கு 200க்கும் மேற்ப்பட்ட ஆண்களும்,பெண்களும் தஞ்சை சென்றனர்.

இன்ஷா அல்லாஹ் இந்த முயற்சி வெற்றி பெற நாம் அனைவரும் துவா செய்வோம்.அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ வசதியை ஏற்படுத்தி தர முயற்சி செய்யும் அதிரை பேரூராட்சி மன்ற தலைவருக்கும்,சமூக ஆர்வலர்களுக்கும்,இளைஞர்களும் அதிரை பிறை சார்பாக பாராட்டுகளையும்,நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.


Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author