அதிரை WFC கால்பந்தாட்ட தொடர்-பொதக்குடி அணி அபார வெற்றி! (படங்கள் இணைப்பு)

அதிரை WFC நடத்தும் 8ஆம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி இன்று மாலை நடைபெற்றது. முதல் நாளான இன்று போட்டியை துவக்கி வைக்க MMS.சேக், PMK.தாஜுத்தீன், VT.தெஹ்லான் மரைக்காயர், ஜஃபருல்லாஹ், ஹைதர் அலி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இன்றைய தினம் பொதக்குடி அணியை எதிர்த்து பட்டுக்கோட்டை 7S பட்டுக்கோட்டை அணி விளையாடியது. முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 0-0 என்ற நிலையில் இருந்தது. இரண்டாம் பகுதி நேர ஆட்டமுடிவில் பொதக்குடி 3-1 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

நாளைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. முதல் ஆட்டம் பட்டுக்கோட்டை போலிஸ் அணியை எதிர்த்து கூத்தனல்லூர் அணியும் இரண்டாம் ஆட்டத்தில். WFC B அணியினரஇ எதிர்த்து NRC அதிரை அணி விளையாடவுள்ளது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close