அதிரை கடற்கரை தெரு தொடக்க பள்ளிக் கட்டிடத்தை ஆய்வு செய்த பிளாக் டெவலப்மெண்ட் அதிகாரி!

கடற்கரை தெரு தொடக்க பள்ளி கூடத்தின் கட்டிடங்களை பிளாக் டெவலப்மெண்ட் அதிகாரி K.பிச்சை மைதீன் BDO அவர்கள் நேற்றைய தினம் நோில் வந்து ஆய்வு செய்தாா்.அதன்படி பழைய சமையல் கூடத்தை இடிக்கவும் புதிய சமையல் கூடம் கட்ட வேண்டும் எனவும் அதற்காக ரூ.2.5 இலட்சம் பணம் உள்ளதாகவும் கூறினாா்.கூடிய விரைவில் அதற்குரிய பணிகள் நடைபெறும் என கூறினார்.

மேலும் இந்த பள்ளி அருகில் பால்வாடி குழந்தைகளுக்கான பள்ளி கட்டிடம் ரூ.5 இலட்சம் மதிப்பிட்டில் கட்டி தர உதவியாக இருப்பதாகவும் கூறினாா்.

Advertisement

Close