அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற 60ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி!(படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் 60ஆம் ஆண்டு விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியினை பேரா.M.A.முஹம்மத் இத்ரிஸ் அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார்கள்.காதிர் முகைதீன் கல்லூரி துணை முதல்வர் டாக்டர்.A.M.உதுமான் முகைதீன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். 

இதனை தொடர்ந்து காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் டாக்டர்.A.ஜலால் அவர்கள் கல்லூரியின் சாதனைகளை பட்டியல்யிட்டு ஆண்டறிக்கை வசித்தார்கள்.தொடர்ந்து நீதிபதி.திரு.K.சம்பத் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள்.அடுத்து நிறுவன நாள் சொற்பொழிவினை டாக்டர்.M.ரவிச்சந்திரன்Ph.D.,(திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்).

இதனைதொடர்ந்து கல்லூரி நாள் உரை மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பரிசினை டாக்டர்.M.திருமலைPh.D.,(தஞ்சை தமிழ் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர்) அவர்கள் வழங்கினார்கள்.இறுதியாக டாக்டர்.P.சிலார் முஹம்மத் (HOD Of Commerce) அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு ஊர் முக்கிய பிரமுகர்கள், பெற்றோர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அதிரை வலைதள நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author