சார்ஜா குலுக்களில் மதுக்கூர் வாலிபருக்கு அடித்தது அதிர்ஷடம்! செவர்லட் கார் பரிசு!

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா(24). செல்வ செழுமை மிக்க துபாய் நாட்டில் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து இவர் பணியாற்றி வருகிறார்.

அண்டை நாடான சார்ஜாவில் உள்ள அல் மனாமா சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற ஷாப்பிங் திருவிழாவுக்கு சமீபத்தில் சென்ற இவர் 200 திர்ஹம்களை செலவழித்து குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்கினார். 100 திர்ஹம்களுக்கு 2 அதிர்ஷ்ட சீட்டுகள் வீதம் 200 திர்ஹம் மதிப்பிலான கொள்முதலுக்கு அவருக்கு 4 அதிர்ஷ்ட சீட்டுகள் வழங்கப்பட்டன.

கடந்த பத்தாம் தேதி அல் மனாமா சூப்பர் மார்க்கெட்டின் அதிர்ஷ்ட குலுக்கல் நடைபெற்றது. இதில் தமிழரான ஷேக் அப்துல்லாவுக்கு அதிர்ஷ்ட பரிசாக செவர்லெட் மாலிபு-2015 ரக கார் கிடைத்தது. கடந்த 26-ம் தேதி (வியாழக்கிழமை) இந்த காரின் சாவி அதிர்ஷ்டசாலி ஷேக் அப்துல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Close