தென்காசியில் நடைபெற்ற மின்னணு ஊடகப் பயிலரங்கம்!(படங்கள் இணைப்பு)

தென்காசியில் இன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மின்னணு ஊடகப் பிரிவு பயிலரங்கில் தேசிய ஒருமைப்பாடு,சமய நல்லிணக்கம்,தாய்ச்சபை நிகழ்வுகள்,முஸ்லிம் லீக் பற்றிய விமர்சனங்களுக்கு சரியான முறையில் பதில் மார்க்க விஷயங்களை கண்ணியமான முறையில் பதிவிடுபவர்கள் போன்ற சிறப்பம்சங்களை இணையதளங்களில் கடைபிடிப்பதற்காக 10 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதும் தலா ரூ.3000 ரொக்கப்பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.இவ்விருதுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச்செயலாளர் பேரா.கே.எம்.காதர் மொய்தீன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

இந்திகழ்ச்சியில் பங்கு பெற்ற 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு சன் தொலைக்காட்சியின் முதன்மை நிருபர் நெல்சன் சேவியர்,நக்கீரன் வார இதழின் தலைமை நிருபர் சி.என்.இராமகிருஷ்ணன்,கேப்டன் தொலைக்காட்சியின் அரசியல் ஆய்வாளர் இல.வேந்தன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Advertisement

Close