அதிரையில் ASC நடத்திய மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டியில் மதுக்கூர் அணி வெற்றி!(படங்கள் இணைப்பு)

அதிரை ASC அணி நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி கிரிக்கெட் தொடர்போட்டி ஆசாத் நகர் ஜும்மா பள்ளி பின்புறம் அமைந்திருக்கும் மைதானத்தில் நேற்று 27/03/2015 இரவு 8.00 மணியளவில் துவங்கியது. இந்த போட்டியில் 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
  
இதன் தொடர்ச்சியாக இன்று மாலை இறுதி போட்டி நடைபெற்றது. இறுதி போட்டியில் மதுக்கூர் அணியினரும் அதிரை ASC அணியினரும் மோதினர். இதில் முதலில் ஆடிய அதிரை ASC அணியினர் 5 ஓவர்களுக்கு 30 ரன் அடித்தனர்.அடுத்து களம் இறங்கிய மதுக்கூர் அணியினர் 4வது ஓவர் இறுதில் 30 ரன்களையும் அடித்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதல் இடத்தை மதுக்கூர் அணியினரும்,இரண்டாம் இடத்தை அதிரை ASC அணியினரும்,முன்றாம் இடத்தை அதிரை காந்தி நகர் அணியினரும் பிடித்தனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை ASC நிர்வாகிகள் வழங்கினார்கள்.  

வெற்றி பெற்ற அணிகளுக்கு அதிரை பிறை வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம். 

Advertisement

Close