அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற 66ம் ஆண்டு விழா!(படங்கள் இணைப்பு)

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 66ம் ஆண்டு விழா இன்று (28-03-2015) மாலை 4.00 மணியளவில் துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு Dr.A.ஜலால் (முதல்வர்,காதிர் முகைதீன் கல்லூரி) அவர்கள் தலைமை தாங்கினார்கள்.மேலும் டாக்டர்.ஆ.அஜ்முதீன் (முதுகலை தமிழாசிரியர்) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகவும் முன்னாள் மாணவருமான நகைசுவைச்சுடர் திரு.அண்ணா சிங்காரவேலு அவர்கள் கலந்து கொண்டு நகைச்சுவை உடன் கலந்த சிந்தனைக்குரிய சொற்பொழிவு மாணவர்களுக்கு ஆற்றினார்.இதனைதொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் போன வருடம் 10,12 வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களும், அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்களும் வழங்கப்பட்டது.பரிசுகளை Dr.A.ஜலால் அவர்களும்,காதிர் முகைதீன் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் ஆகியோர் மாணவர்களும் ,ஆசிரியர்களும் பரிசுகளை வழங்கினார்கள்.

முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் ஜனாப். A.மகபூப் அலி அவர்கள்  ஆண்டறிக்கை வசித்தார்கள்.நிகழ்ச்சியினை ஜனாப்.எம்.உமர் பாரூக் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியக்கழக பொறுப்பாளர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள், அலுவலக பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.      

Advertisement

Close