பதிவுகள்

அதிரையில் முற்றுகையில் ஈடுபட்ட தி.மு.க வினர் மற்றும் விவசாயிகள் கைது! (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில அணை கட்டுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படவுள்ளனர். 

விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தொமுச போன்ற எதிர்க்கட்சி தொழிற்சங்கங்கள் பேருந்துகளை இயக்காததால் குறைவான பேருந்துகளே ஓடுகின்றன. போராட்டத்தை ஒட்டி பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிரையில் இன்று காலை 11 மணியளவில் திமுக வை சேர்ந்த இராம.குணசேகரன்,அன்சர் கான், கட்சி தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் சுமார் 50 பேர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து இவர்களை காவல் துறையினர் கைது செய்து சமுதாய கூடத்தில் வைத்துள்ளனர். இவர்கள் இன்று மாலை விடுவிக்கப்படலாம் என கூற்ப்படுகிறது.

Advertisement

Show More

Related Articles

Close