10ம் வகுப்பு சிறப்புதுணைத் தேர்வு இன்று விண்ணப்பிக்கலாம்!

அரசு தேர்வுகள் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடைபெறவுள்ள 2015ம் ஆண்டு பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு எழுத அரசுத் தேர்வுகள் இயக்குனரகத்தால் நிர்ணயம் செய்த கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சிறப்பு அனுமதி திட்டமான தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். மார்ச் 2015 பத்தாம் வகுப்பு தேர்வை பள்ளி வாயிலாக அல்லது தனித்தேர்வாக எழுதியிருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் தேர்வு எழுத விரும்புவோர் தங்கள் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இன்றும், நாளையும் மட்டும் பதிவு செய்ய வேண்டும். தேர்வு கட்டணம் ரூ.125, சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.500, பதிவு கட்டணம் ரூ.50 என்று மொத்தமாக ரூ.675 செலுத்த வேண்டும். மேற்கண்ட பதிவு தொகையை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். பதிவு செய்த மாணவர்களுக்கான அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நன்றி: தினகரன்

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

 

Close