Advertisement

' />

துபாய் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று அதிரைக்கு பெருமை சேர்த்த வீரர்கள்! (படங்கள் இணைப்பு)

துபாயில் AUTO TRADER வழங்கும் முதலாம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி (06-02-2015) அன்று துவங்கியது.

இந்த தொடர் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 20 அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் நமதூர் அதிரை பாய்ஸ் அணியும் கலந்துக்கொண்டு விளையாடியது. பல தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் கலந்துக்கொண்டு விளையாடிய இத்தொடரில் அதிரை அணி மிகச் சிறப்பாக ஆடி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

இறுதிப்போட்டி உம்முல் குய்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் அதிரை ABCC அணியும் AUTO TRADERS அணியும் மோதினர். முதலில் களமிறங்கிய AUTO TRADERS அணி 20 ஓவர்களுக்கு 119 ரண்கள் எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 120 ரண்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடம் களமிறங்கிய அதிரை ABCC அணியினர் 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 121 ரண்களை குவித்து வெற்றி பெற்றனர். இதன் மூலம் AUTO TRADERS வெற்றிக் கோப்பையை அதிரை ABCC அணி கைப்பற்றி அசத்தியது. கடல் கடந்து சென்று தங்களின் கடும் வேலைகளுக்கு மத்தியில் தங்களின் கிரிக்கெட் திறமையால் அதிரைக்கு பெருமை தேடித் தந்த நமதூர் வீரர்களுக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement

Close