பதிவுகள்

சவூதியில் தொடரும் போர் பதற்றம்! 07 விமான நிலையங்கள் மூடல்!

சவூதி அரேபியா நேற்றைய தினம் ஏமன் நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதலை துவங்கியது. இதனை அடுத்து வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஏமன் நாட்டு கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது என்னேரமும் திருப்பி தாக்கக்கூடும் என்பதால் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக ஏமன் நாட்டு எல்லையில் அமைந்துள்ள தென் நகரங்களான அப்ஹா, ஜிஹான் மற்றும் நஜ்ரான் உள்ளிட்ட 7 விமான நிலையங்களையும் தற்காலிகமாக மூடியுள்ளது. மேலும் இன்று அப்ஹாவில் இருந்து விமானப் பயணம் செல்ல இருந்த பயணிகளை தாயிப் வழியாக அனுப்பப்பட உள்ள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள் நாட்டு விமான நிலையங்களும் சர்வதேச விமான நிலையங்களும் அடங்கும்.

தகவல்:அஹமது ஜலாலுத்தீன் (அதிரை -Camp Saudi)

Advertisement

Show More

Related Articles

Close