இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது! ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறல்!

உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழத்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.  முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 328 ரன்களை குவித்தது. அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் 105(93)  ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டை வீழத்தினார். இதனையடுத்து 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம்  இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறந்த தொடக்கத்தை கொடுத்தனர். 

தவான் 45(41) ரோகித் சர்மா 34(48) ரன்களும் குவித்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தது  இந்தியாவிற்கு பின்னவை தந்தது. இதனையடுத்து வந்த டோணி, ரஹானே பொறுமையாக விளையாடி வந்தனர். ரஹானே 44(68) ரன்னிலும், கேப்டன் டோணி 65(65) ரன்னில் ஆட்டமிழக்க இந்திய தேர்வியின் ஆட்டமிழக்க இந்தியா தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இறுதியில் இந்திய அணி 46.5 ஓவர்களில் 233 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி வரும் 29ம்  தேதி ஞாயிற்றுக்கிழமை மெல்பர்னில் நடக்க உள்ளது.    

Advertisement

Close