அதிரை தவ்ஃபீக் 12 பேரும் நிரபராதிகள்!நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

சரியான ஆதாரமில்லாததாகக் கூறி, மவ்லவீ ஹாமித் பக்ரீ குழுவினர் வழக்குகளிலிருந்து விடுதலை.

இதுகுறித்து, ஐக்கிய சமாதானப் பேரவை அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:- 

கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் (புனித ரமழான் மாதம் 27ஆம் நாளன்று) மிகப்பெரிய சதி வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, எமது அமைப்பின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ,அப்துர் ரஹ்மான் ஷிப்லி உட்பட 12 பேர் – காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில், கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கு மீதான விசாரணை 23.02.2015 அன்று முடிவுக்கு வந்தது. நீதிபதியால் வழங்கப்பட்ட தீர்ப்பில் – ஹாமித் பக்ரீ மற்றும் குழுவினர் குற்றமற்றவர்கள், நிரபராதிகள், அவர்களுக்கெதிரான எந்த வாதங்களும், சாட்சியங்களும் நிலை நிற்கவில்லை என்றும், எனவே அவர்களை விடுதலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், எமது அமைப்பின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ உள்ளிட்ட 12 பேரும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ,முத்துப்பேட்டை ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலின் முதல் இமாமும் , முத்துப்பேட்டையில் தமுமுக வின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவரும் ,இந்த வழக்கில் தொடர்புடையவருமான அப்துர் ரஹ்மான் ஷிப்லி அவர்கள் நமது முத்துப்பேட்டை சார்ந்த  இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் ,மௌலவி ஹாமித் பக்ரி மன்பயி ,நான் ,அதிராம்பட்டினம் தவ்பீக் உட்பட 12 பேரும் கடந்த 2002 ஆம் ஆண்டு குற்றாலத்தில் ஒரு மார்க்க சம்பந்தமான நிகழ்விற்காக ஒன்று கூடினோம் .ஆனால் காவல்துறை நாங்கள் ஏதோ சதி செய்வதாக கூறி எங்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது .

கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த குற்றால சதி வழக்கின் தீர்ப்பில் நாங்கள் அனைவரும் குற்றமற்றவர்களாக ,நிரபராதிகளாக விடுதலையானோம் .எல்லா புகழும் அந்த அல்லாஹ் ஒருவனுக்கே !
இவ்வாறு அப்துர் ரஹ்மான் ஷிப்லி கூறியுள்ளார் . 

தகவல்:P.M.N.ரியாஸுத்தீன்
நன்றி :முத்துப்பேட்டை ஜெட்பிரஸ்

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author