Advertisement

' />

துபாய் – திருச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நேரத்தில் மாற்றம்!

துபாய் – திருச்சி இடையே பகலில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மார்ச்29 முதல் இரவு நேர விமானமாக மாற்றம் செய்யப்படுகிறது.

தினசரி சேவையாக துபாய் – திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் இந்த IX612 விமானம் தற்பொழுது காலை 07:15 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்டு மதியம் 12:55 திருச்சி சென்றடைகிறது. பிறகு திருச்சியிலிருந்து IX-611 விமானம் 14:15க்கு புறப்பட்டு மாலை 17:05 க்கு துபாய் வந்து கொண்டிருக்கிறது.

கோடைகாலத்தையொட்டி பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் துபாய் – திருச்சி விமான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வரும் மார்ச் 29ம் தேதி முதல் மாலை 18:25 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 00:05 மணிக்கு திருச்சி சென்றடையும் பின்னர் நள்ளிரவு 00:55 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு அதிகாலை 03:45 மணிக்கு துபாய் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Close