இந்தியாவிற்கு வந்துள்ள கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் கலிஃபா அல்தானி!

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள கத்தார் மன்னருக்கு டெல்லியில் உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லி வந்துள்ள கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் கலிஃபா அல்தானியை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர் அங்கிருந்து குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்ற அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். ஆப்கானிஸ்தான், 
பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் தாலிபான்கள் தாக்குதல் குறித்தும், இரு நாட்டு உறவுகள் குறித்தும் அப்போது அவர்கள் விவாதித்தாக கூறப்படுகிறது. பின்னர் கத்தார் மன்னர் குடியரசு தலைவர் அளித்த விருந்திலும் கலந்து கொண்டார்.

Advertisement

Close