சவூதியிலிருந்து தாயகம் சென்று வேறு விசாவில் சவூதிக்கு வரும் சகோதரர்களின் கவனத்திற்கு!

Want create site? Find Free WordPress Themes and plugins.

சவூதியிலிருந்து விடுப்பில் தாயகம் சென்று தான் வேலை செய்த அதே கம்பெனிக்கு திரும்பி வராமல் வேறு விசாவில் வேறு வேலைக்கு வர முயற்சி செய்யாதீர்கள் ….

பல சந்தர்பங்களில் பதிவு செய்யப்பட்ட செய்திதான் என்றாலும் மீண்டும் மீண்டும் நம் சகோதரர்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டுள்ளதால் மீண்டும் இந்தப் பதிவு. நேற்றுவரை தமாம் ஏர்போர்ட்டிலிருந்து  திருப்பி விடப்பட்டுள்ளார்கள்.

சவூதி அரேபியாவில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி விட்டு விடுப்பில் தாயகம் சென்றவர்கள் அந்த நிறுவனத்திற்கு வர விருப்பமில்லாமல் அவர்களின் விசா காலம் முடிந்தவுடன் வேறு ஒரு நிறுவனத்தின்  மூலம்  விசா  பெற்று வேலைக்கு வர முயற்சிக்க வேண்டாம்.

நீங்கள் பணியாற்றும் நிறுவனம் அல்லது ஸ்பான்சர் பிடிக்காவிட்டால் Exit வாங்கி புறப்பட்டு விடுங்கள். விடுப்பில் சென்று வேறு நிறுவனம் வரலாம் என்ற என்னத்தில் செல்ல வேண்டாம். அவ்வாறு  செய்யாதீர்கள்  என்று  கேட்டுக் கொள்கிறோம்.

சவூதி  அரேபியாவின் புதிய சட்டப்படி (பல மாதங்கள் ஆகிவிட்டன) விடுப்பில் சென்றவர் மீண்டும் திரும்பி வராவிட்டால் குடியுரிமை அலுவலக கனிணியில் அவரது ID எண் ஹூரூப் ஆகிவிட்டதாக  தானாகவே  மாற்றி விடும் முறையை வைத்துள்ளார்கள். அதனால் மீண்டும் அவர் இந்த நாட்டிற்கு வர முயற்சித்து விசா ஏற்பாடுகள் செய்தால் அதற்கான அனைத்து பதிவுகளும் நம் நாட்டில் நடக்கும்.

அனால் சவூதியில் உள்ள விமான நிலையம் வந்தவுடன் உங்கள் கைரேகை பதிவின் மூலம் இங்குள்ள குடியுரிமை கனிணியில் நீங்கள் ஏற்கனவே ஒருவரை ஏமாற்றி விட்டதாகவே காட்டும். அதனால் உங்களை இந்த நாட்டிற்குள் விடாமல் திரும்ப அங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள்.

நீங்கள் செலவு செய்த அனைத்தும் வீனாகிப் போய்விடுவதோடு தேவையற்ற மன உளைச்சல் வேறு. அதோடு 10 ஆண்டுகளுக்கு GCC நாடுகள் அனைத்திற்கும் போக முடியாது என்ற தகவலும் உள்ளன.

GCC ன், மற்ற நாடுகளில் குற்றப் பின்னனியில் உங்கள் மீது வழக்குகள் இருந்து அங்கிருந்து வெளியேறிவர்கள் மீண்டும் GCC நாடுகளுக்கு வர முயற்சிக்க வேண்டாம். GCC நாடுகளின் அனைத்து குடியுரிமை தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டில் பணியாற்றியவரின் அனைத்து  தகவல்களும்  மற்ற  நாட்டில் காண முடியும் என்ற நிலை உள்ளது. ஆகவே சட்டத்தை மதிக்காமல் குற்றப் பின்னனியில் உள்ளவர்களை இந்த நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்ற குடியுரிமைச் சட்டம் உள்ளது.

மற்ற அரபு நாடுகளில் பணியாற்றியவர்கள் அங்குள்ள சட்டதிட்டங்களை மதிக்காமல் உங்கள் மீது குற்றபதிவு செய்யப்பட்டு நாடு கடத்தப் பட்டிருந்தால் மீண்டும் அரபு நாடுகளுக்குச் செல்ல முயற்சிக்க வேண்டாம். உங்களின்  செலவுகள் எல்லாம் வீனாகிவிடும். ஆகவே இதை தவிர்த்துக் கொண்டு மாற்று வழிகளை முயற்சியுங்கள்.

ஊரில் உள்ள ஏஜென்டுகள் “அதெல்லாம் ஒன்னும் கிடையாது நீங்க போகலாம்” என்று பயண ஏற்பாடுகள்  செய்து லட்சங்களை கழட்டி விடுவார்கள். இது போன்ற பின்னனியில் உள்ளவர்களை இந்த நாட்டு (சவூதி) விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படும் தகவல்களை  தினமும் கேட்டுக் கொண்டுள்ளோம்.

சகோதரர்களே! ஏமாற வேண்டாம். ஏமாற்றம் வேண்டாம். விழிப்புடன் உங்கள் எதிர்காலத்தை அமைத்துக்  கொள்ளும்படி  கேட்டுக்  கொள்கிறோம்.

பிரார்த்தனைகளுடன்
எம். ஹூஸைன்கனி,
தமுமுக – ரியாத்.

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author