அமீரகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள்!(படங்கள் இணைப்பு)

அமீரகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வரும், இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி சார்பாக, கடந்த மார்ச் 20 ம் தேதி, ஷார்ஜா பல்கலைக்கழக மைதானத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 

இதில் அபுதாபி ரைடர்ஸ், துபாய் வாரியர்ஸ், ஷார்ஜா ப்ளாஸ்டர்ஸ், வடமாநிலங்கள் ஒருங்கினைந்த சேலஞ்சர்ஸ் அணி, கர்நாடகா கிங்ஸ் மற்றும் தமிழ்நாடு ஸ்மாஷர்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்று விளையாடினர்.

ஒவ்வொறு அணிகளும் பிரத்யேக உடையில் மைதானத்தில் அணிவகுத்து நிற்க இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது முனவ்வர் அவர்களும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் கேரள மாநில தலைவர் ஷாதுல்லாஹ் அவர்களும் விழாவை துவக்கி வைத்தனர்.

கால்பந்து, கைப்பந்து, கபடி, தடகள போட்டிகள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கான போட்டிகள் உட்பட பல்வேறு வகையான போட்டிகள் காலை 8.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றன.

ஒவ்வொரு அணியும் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வெவ்வேறு போட்டிகளில் கோப்பையை வென்றன. இறுதியாக அதிக புள்ளிகளின் அடிப்படையில் கர்நாடகா கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது . பல போட்டிகளிலும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கைப்பந்து போட்டியில் ரன்னர் அப் இடத்தை பிடித்தது தமிழ்நாடு ஸ்மாஷர்ஸ் அணி.

கால்பந்தில் கேரளத்தின் ஷார்ஜா பிலாஸ்டர்ஸ் அணியும், கைப்பந்தில் கர்நாடக கிங்ஸ் அனியும், கபாடியில் அபுதாபி ரைடர்ஸ் அனியும், கையிறு இழுக்கும் போட்டியில் துபை வாரியர்ஸ் அணியும் வெற்றிவாகை சூடியது.

வெற்றிபெற்ற அனைத்து அணிகளுக்கும், நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஷார்ஜா பல்கலைக்கழக துணை வேந்தர் மாஜித் அல் ஜர்வான் கர்நாடக கிங்ஸ் அணியினருக்கு சாம்பியன் கோப்பையை வழங்கினார்.

பென்களுக்கு, சிறுவர், சிறுமியருக்கும் தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Close