அதிரையில் சிறப்பாக துவங்கியது ACL கிரிக்கெட் தொடர்!அதிரை ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் இரண்டாம் ஆண்டு  ACL(அதிரை சாம்பியன் லீக்) 

T20 தொடர் போட்டி:

 இன்று(09-06-2015) முதல் துவங்கியது. அதிரையின் தலைசிறந்த அணிகள் மட்டுமே பங்குபெறும் ACL லீக் தொடர் சென்ற ஆண்டு முதன்முதலில் துவங்கப்பட்டது அதில்  அதிரை AFCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இவ்வாண்டு அதிரையின் சாம்பியன் யார் ?? என்பதில் மிகுந்த போட்டி நிலவுகிறது, பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்று மதியம் 2 மணியளவில் முதல் போட்டி அதிரை ASC அணியை எதிர்த்து சிட்னி அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சிட்னி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

பங்குபெரும் அணிகள் :

AFCC, RCCC, PCC, ASC, SFCC

இடம் : கிரானி மைதானம்

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close