அதிரையர்களுக்கு நெருங்கிய சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மறைவு!

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரும், 31 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்தவருமான லீ குவான் யூ அவர்கள் (வயது 91) இன்று அதிகாலையில் மறைந்துவிட்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள்.

இவருடைய ஆட்சி காலத்தில் தான் நம்முடைய முன்னோர்களான அப்பாமார்களும் வாப்பாமார்களும் சிங்கப்பூரில் தொழில் செய்தும் உழைத்தும் பொருளாதாரத்தை திரட்டி நம்முடைய உயர்விற்கும் நம் நாட்டின் அந்நிய செலாவணி உயர்விற்கும் உதவினர். அந்த அடிப்படையில் லீ குவான் யூ அவர்களை நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

பலரும் அறிந்திராத செய்தி ஒன்று:

அதிரை மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சிங்கை. அப்துல் ஜப்பார் அவர்கள் லீ குவான் யூ அவர்களின் மிக மிக நெருங்கிய நண்பராக இளமைகாலத்தில் திகழ்ந்துள்ளார்கள். லீ குவான் யூ அவர்கள் அரசியல் பாதைக்கு திரும்புமாறு விடுத்த அழைப்பை மட்டும் ஏற்றிருந்தால் மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்கள் லீயின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும், அல்லாஹ் நாடவில்லை.

குறிப்பு: 
வார்டு எண்: 15, கீழத்தெருவின் முன்னாள் கவுன்சிலர் சகோதரர் அப்துல் லத்தீப் மற்றும் நடப்பு கவுன்சிலர் சகோதரி ஷாஜஹான் ஆகியோரின் தந்தையுமாவார் மாஹூம் சிங்கை. அப்துல் ஜப்பார் அவர்கள்.

Advertisement

Close