அதிரை ஷிஃபா மருத்துவமனையில் நடைப்பெற்ற முதியோர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

அதிரையில் உள்ள முதியோர்களை ஒன்று சேர்ப்பது பற்றி ஆலோசனைக் கூட்டம் கடந்த சில வாரங்களாக சேர்மன் அஸ்லம் தலைமையில் நடைபெற்றது.இதனையடுத்து அதிரை ஷிஃபா மருத்துவமனையில் முதியவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி இன்று காலை முதல் நடைப்பெற்று வருகிறது. 

இதற்கு அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நரம்பியல் சிறப்பு மருத்துவர் Dr.வாஞ்சிலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை அளித்தார்கள்.மேலும் உள்ளூர் மருத்துவர்களும் கலந்து கொண்டனர். இதில் முதியோர்கள் பலர் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதில் முதியவர்களுக்கான பல முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்திற்கு அதிரை AFCC நண்பர்கள் பக்கபலமாக இருந்து  உதவி புரிந்தனர்.மேலும் இந்த நிகழ்ச்சிக்கு அதிரை சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களையும்,நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

                    
 படங்கள்: அஹமது ஜைது ( அதிரை பிறை நிர்வாகி)

Advertisement

Close