அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்!(படங்கள் இணைப்பு)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 21 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/03/2015 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 

கிராத்                     : சகோ. அப்துல் காதர் ( உறுப்பினர் ) 

முன்னிலை             : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை          : சகோ. அபூபக்கர் ( பொருளாளர் ) 

சிறப்புரை              : சகோ.  A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )

அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )

நன்றியுரை      : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )

தீர்மானங்கள்:

1) எதிர் வரும் ரமலானை முன்னிட்டு அதிரை பைத்துல்மால் ரியாத் 
கிளையின் சார்பாக இரண்டாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் முதல் அல்லது இரண்டாம் வாரம்  நடத்துவதென முடிவு  செய்யபட்டது.

2) ABM ரியாத் கிளையின் சார்பாக சென்ற வருடம் ரமலான் மாதத்தில் உம்ரா பயணம் மேற்கொண்டது போல் இந்த வருடமும் இன்ஷா அல்லாஹ் 
சிறப்பாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டு, அதற்கான தேதி, பிறை அடுத்த கூட்டத்தில் அறிவிக்கப்படும்.  

 3)  வரும் கல்வி ஆண்டில் படிப்பில் ஆர்வம் உள்ள ஏழை மாணவர்களுக்கும் குடும்ப சூழ்நிலை காரணமாக இடையில் படிப்பை நிறுத்திவிட்டு மீண்டும் தொடர  முடியாமல் உதவி எதிர்பாத்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கும்  உதவி செய்வது விஷயமாக ஆலோசனை செய்யப்பட்டு அதற்கான விவரங்களை தலைமையகத்தில் கேட்பது  என தீர்மானிக்கப்பட்டது. 

4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் APRIL 10 – ம் தேதி   ஹாராவில் 4.30 TO 5.30 PM வரை  நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரைவாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

Close