உயிருக்கு போராடும் முத்துப்பேட்டை இரட்டையர்கள்! உதவி கரம் நீட்டலாமே!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் மர்ஹும்அபூபக்கர். இவரது மகன்களான மன்சூர் அலி மற்றும் நிசார் ஆகியோர் இரட்டை சகோதரர்கள் இவர்கள் ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள் .

27 வயதான இந்த இரட்டை சகோதரர்கள் குவைத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பனி புரிந்து வருகின்றனர் .கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரட்டை பிறவிகளில் ஒருவரான மன்சூர் என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது .இதனால் தாம் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து விடுப்பு எடுத்து கொண்டு தாயகம் வந்துள்ளார் .
பின்னர் மருத்துவமனைக்கு சென்று தனது உடல்நிலையை பரிசோதித்துள்ளார் மன்சூர் .மன்சூரின் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர் ,இரண்டு கிட்னிகளில் ஒன்று செயலிழந்து உள்ளதாகவும் ,மற்றொன்று போதுமான வளர்சியின்றி உள்ளதாகவும் கூறியுள்ளார் .
மேலும் செயலிழந்த சிறுநீரகத்தை (கிட்னியை )உடனடியாக அறுவைசிகிச்சை செய்து அகற்றிவிட்டு மாற்று சிறுநீரகம் பொறுத்த வேண்டும் என்றும், வளர்ச்சியின்றி காணப்படும் சிறுநீரகத்திற்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் கொடுக்க பட வேண்டும் என்றும் மருத்துவர் கூறியுள்ளார் .
இந்த சோகம் ஒருபுறமிருக்க ,இரட்டைபிரவிகளில் இளையவரான நிஷார் என்பவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது .இதனால் நிஷார் குவைத்தில் உள்ள அதான் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துள்ளார் .நிஷாரின் உடல்நிலையை பரிசோதித்த குவைத் மருத்துவர்கள் ,மூத்த சகோதரரான மன்சூருக்கு ஏற்பட்டிருப்பது போல் ஒரு கிட்னி செயலிழந்து விட்டதாகவும் மற்றொரு கிட்னி வளர்ச்சியின்றி காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் .இதனால் மனமுடைந்த மன்சூர் மற்றும் நிஷார் ஆகியோரின் பெற்றோர்கள் உறவினர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர் .
இந்நிலையில் இரட்டை பிறவிகளில் இளைய சகோதரரான நிஷார் குவைத்திலிருந்து இன்று (21-03-2015)காலை சென்னை வந்து இறங்கியுள்ளார் .தற்போது நிஷார் சென்னை புரசைவாக்கத்திலுள்ள ஆயிஷா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் .அவருக்கு தற்பொழுது (diyalisis )டயாலிசிஸ் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
இந்நிலையில் முத்துப்பேட்டை ஜெட் பிரஸ் இணையதளம் சார்பாக ,சென்னையில் தங்கியிருக்கும் மன்சூர் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம் .அப்போது மன்சூர் அவர்கள் முத்துப்பேட்டை ஜெட் பிரஸ் இணையதளத்திடம் கூறியதாவது .
இரட்டை சகோதரர்களான எங்களுக்கு ஒரே மாதிரியான கிட்னி பிரச்சினை ஏற்பட்டுள்ளது .எங்கள் இருவருக்குமே அறுவை சிகிச்சை செய்து கிட்னியை மாற்ற வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளார் .
மன்சூராகிய எனக்கு எனது தாய் அவரது கிட்னியை தானம் செய்வதற்கு முன் வந்துள்ளார் .ஆனால் எனது தம்பி நிசாருக்கு மாற்று கிட்னியை தானம் செய்வதற்கு யாரும் முன் வரவில்லை .கிட்னியை மற்றவர்களிடமிருந்தோ அல்லது மருத்துவமனையிளிருந்தோ வாங்க வேண்டும் என்றால் மிகுந்த பொருளாதார செலவு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர் .
இருவருக்குமே ஒரே சமையத்தில் ,அதுவும் ஒரே மாதிரியான பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக நாங்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றோம் .எனவே மன்சூராகிய நானும் எனது தம்பியும் உரிய மருத்துவ சிகிச்சை பெற்று பூரண குணமடைய உங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்து எங்களின் வாழ்வு சிறக்க உதவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் .
வங்கிகளின் மூலமாக பண உதவி செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் .
S .SHAHILA BANU
W /O .ABOOBACKER 
INDIAN BANK
A /C NO :6074011934
MUTHUPETTAI BRANCH 
India Mobile no:-91 9788525955,7418736050,
Kuwait Mobil no +965 9939 6500,+965 67668765 ..91 97687759

தகவல்: சேக் பரீத்-முத்தப்பேட்டை ஜெட் பிரஸ்

Advertisement

Close