சவூதி அரேபியாவை தொடர்ந்து UAE யும் ஸ்வீடனுக்கு கடும் கண்டனம்! தூதரையும் திரும்பப்பெற்றது!

Want create site? Find Free WordPress Themes and plugins.

இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைபடுத்தும் சவூதி அரேபியாவை விமர்ச்சித்துள்ள சுவீடனுக்கு, இஸ்லாத்திற்கு நாங்கள் யாரிடமிருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிர்பார்க்க வில்லை என சவூதி அரேபியா பதிலடி கொடுத்து தூதரையும் திரும்ப அழைத்து கொண்டது.

இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு:

இஸ்லாத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் இணையதளத்தில் விமர்ச்சித்த சவூதியை சேர்ந்த சவூதியின் இஸ்லாமிய நீதிமன்றம் கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.

இந்த தண்டனை மனித உரிமைகளை தகர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது என்றும் இஸ்லாமிய மார்க்க சட்டங்களை அரசியல் சாசனமாகவே சவூதி அரேபியா வைத்திருப்பது ஏற்க கூடிய விசயம் இல்லை என்றும் சுவீடன் அண்மையில் கருத்து கூறியிருந்ததோடு, 2005 ஆண்டில் சவுதி அரேபியா உடன் செய்து கொள்ளப்பட்ட இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் காலவதியாகும் நிலையில் இருக்கிறது, அதை புதிப்பிக்க போவதில்லை என்றும் சுவீடன் அறிவித்திருந்தது.

சுவீடனின் இந்த நிலைபாட்டிற்கு சவூதி அரேபியா கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளது.

எங்களிடம் இஸ்லாம் இருக்கிறது, இஸ்லாத்திற்கு நாங்கள் யாரிடமிருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிபார்க்கவில்லை.

இஸ்லாம் எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது. எங்கள் நாட்டில் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை விமர்ச்சிக்க எவனுக்கும் உரிமை இல்லை என்று கடுமையாக கூறியுள்ளது.

மேலும் எங்களது உள்நாட்டு விவகாரத்தில் தலையை நுழைத்துள்ள சுவீடனை கடுமையாக கண்டிக்கும் விதமாக சுவீடனிலிருந்து சவூதி அரேபிய தூதரை திரும்ப அழைத்து கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.

சவூதி அரேபியாவின் உறுதியான இந்த நிலைபாடு இஸ்லாமிய எதிரிகள் பலரையும் அதிர வைத்திருக்கிறது.

பொதுவாக சவூதி அரேபியாவின் உறவை மற்ற நாடுகள் முறைத்தாலோ அல்லது மற்ற நாடுகளின் உறவை சவூதி அரேபியா முறித்தாலோ அதனால் சவூதி அரேபியாவிற்கு எவ்வித நஷ்டமும் இல்லை, மாறாக உறவை முறிக்கும் நாட்டிற்கே பெருத்த நஷ்டமாகும்.

மேலும் சவூதி அரேபியா தம்முடைய உள்நாட்டு விவகாரத்தில் யார் தலையிட்டாலும் கடுமையான போக்கை கையாளும் என்பதை ஆரம்பகாலம் முதல் பல்வேறு சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது ஆட்சி பொறுப்பில் இருக்கும் மன்னர் சல்மான் இன்னும் கடுமையான போக்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை காக்க வைத்து விட்டு அஸர் தொழுகைக்கு சென்றது நினைவுக்கூறத்தக்கது.

இஸ்லாமிய சட்டத்தை விமர்சித்துள்ள ஸ்வீடனுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சவூதி அரேபியாவை தொடர்ந்து UAE யும் ஸ்வீடனுக்கு கடும் கண்டனத்தைத் பதிவு செய்து, தன் தூதரையும் திரும்பப்பெற்றுள்ளது.

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author