சுவிடனுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை ஆரம்பித்தது சவுதி!

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை விமர்ச்சித்து சவுதியில் இஸ்லாத்தின் பெயரால் பெண்ணுரிமைகள் பறிக்க படுவதாக குற்றம் சாட்டிய சுவீடனுக்கு எதிரான தனது கடுமையான நடவடிக்கைகளை சவுதி அரசு நேற்று முதல் ஆரம்பித்து விட்டது

சுவீடனை சார்ந்த வணிகர்களுக்கு புதிதாக எந்த வணிக விசாக்கைளையும் வழங்குவதில்லை என்றும் சவுதியில் வணிக விசாவில் தங்கியுள்ள சுவீடன் வணிகர்களுக்கான விசாவின் காலம் முடிந்து விட்டால் அந்த விசாக்களை புதிப்பது இல்லை என்றும் சவுதி அரசு நேற்று அறிவித்தது.

இது சுவீடன் வணிகர்களுக்கு மத்தியில் மிகபெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

சுவீடனின் வெளியுறவு துறை அமைச்சர் தேவை இல்லாமல் சவுதியை வம்புக்கு இழுத்து இஸ்லாத்தை விமர்ச்சித்திருப்பது பொருளாதார அடிப்படையில் சுவீடனுக்கு மிகுந்த இழப்புகளை உருவாக்கும். இந்த பிரச்சனையில் சவுதியிடம்  உடனடியாக சுவீடன் அரசு சமரச பேச்சு வார்த்தையில் இறங்கி பிரச்சனைக்கு உடனடியாக முற்று புள்ளி வைக்க வேண்டும் என்றும் சுவீடன் தொழில் அதிபர்கள் சுவீடன் அரசை கேட்டு கொண்டுள்ளனர்.

Advertisement

Close