தரகர் தெரு இளைஞர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது!

அதிரை 10வது வார்டு ஹாஜா நகரில் இருந்து தரகர் தெரு மைதானத்திற்கு வரும் பாதையில் கடந்த 1 மாதமாக குடி தண்ணீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக சென்று வருகிறது .அந்த தண்ணீர் சாலையில் தேங்கி கிடப்பதால் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறினார்கள்.மேலும் இதை பற்றி 10வது வார்டு கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியும் இது வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்கள்.  நேற்று மீண்டும் 10வது வார்டு கவுன்சிலர் சபுருன் ஜமீலா அவர்களிடம் தரகர் தெரு இளைஞர்கள் உடைந்த தண்ணீர் குழாயினை சீர் செய்ய கோரிக்கை வைத்தார்கள்.இதனையடுத்து இன்று காலை 10வது வார்டு கவுன்சிலர் தலைமையில் குடி தண்ணீர் குழாய் சீரமைக்கப்பட்டது.

Advertisement

Close