ஏமன் நாட்டு பள்ளிவாசல் மீது தாக்குதல்! 55 பேர் உயிரிழப்பு!

ஏமன் நாட்டின் தலைநகரமான சனாவின் மையப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் பலியாகினர். நேற்று  வெள்ளிக்கிழமை என்பதால் ஏமன் தலைநகர் சனாவின் மையப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் திரளான இஸ்லாமிய மக்கள் ஜும்ஆ தொழுகைக்காக ஒன்று கூடினர். அப்போது அல்-பத்ர் மற்றும் அல்-ஹசாஹூஷ் என்ற இரண்டு பள்ளிவாசல்கள் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 55 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Close