வாக்காளர் பட்டியலில் ஆதார் அடையாள எண் இணைக்க வேண்டும். கலெக்டர் அறிவுரை

வாக்காளர் பட்டியலில், ஆதார் அடையாள அட்டை எண், மொபைல்ஃபோன் எண் மற்றும் இ மெயில் முகவரி யை இணைக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து, கலெக்டர் சுப்பையன் வெளியிட்ட அறிக்கையில் இந்திய தேர்தல் ஆணையம் தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை முறைப்படுத்தி, விபரங்களை உறுதிபடுத்தும் திட்டத்தை கடந்த, 3ம் தேதி முதல் நாடு முழுவதும் துவக்கியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள், தங்களுடைய ஆதார் அடையாள அட்டை எண், மொபைல் ஃபோன் எண் மற்றும் இமெயில் முகவரி ஆகியவற்றை கண்டிப்பாக இணைக்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில், ஆதார் அடையாள அட்டை விடுபட்டோர் பட்டியலில் ஏழு லட்சத்து, 86 ஆயிரத்து, 89 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் ஆதார் அடையாள அட்டைக்கான ஃபோட்டோ மற்றும் கைரேகை பதிவு செய்யும் பணி நடக்கிறது. இதுவரை, 43 ஆயிரத்து, 132 பேர் பதிவு செய்துள்ளனர்.

மேலும், வாக்காளர்கள், தீதீதீ.ணதிண்ணீ.டிண என்ற இணையதள முகவரியிலும் தங்களுடைய ஆதார் அடையாள அட்டை எண், மொபைல் ஃபோன் எண் மற்றும் இமெயில் முகவரியை பதிவு செய்து கொள்ளலாம் என தனது அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Close