குவைத்தில் இந்தியருக்கு நேர்ந்த கொடுமை

ஆந்திராவை சேர்ந்த பட்டினி  என்பவரின் மகன் ஶ்ரீதர். இவர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தின் மூலம் பணிபுரிந்து வந்துள்ளார்.

பணிபுரிந்து கொண்டிருக்கும் சூழலில் விமான நிலையம் அருகே ஒரு சமயம் விமானம் பறந்து கொண்டிருந்ததை படம் புடிக்க, அதை தற்செயலாக பார்த்து விட்ட விமான நிலைய அதிகாரிகள் அவரின் போன் மற்றும் அட்டைகளை பிடிங்கி கொண்டு அனுப்பி விட்டனர்.

நடந்த பிரச்சினையை அவர் கம்பெனியில் சொல்ல அந்த பிரச்சினையை நீ சரி பண்ணி விட்டு வேலைக்கு வரவும் என சொல்ல ,
சக நண்பர்கள் ஶ்ரீதரிடம், இதனால் உனக்கு பல பிரச்சனை வரும் என அப்படி இப்படி என பல்வேறு சொல்ல அதனால் அதிர்ச்சி ஏற்பட்டு மனரீதியான முயற்சியில் பாதிக்கப்பட முற்றிலும் மன நோயாளியானார்.

இதை அறிந்த அவர் வேலை பார்த்த நிறுவனம் இவரை ஊருக்கு அனுப்பும் முயற்சியில் 
18.03.2015 அன்று புதன்கிழமை 
ஆந்திராவுக்கு செல்ல விமான நிலையம் அழைத்து வந்தனர்.

பாதிக்கப்பட்டிருந்ததால் மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
யாரோ ஏதோ சொல்ல பட்சத்தில் நான்கைந்து மாத்திரைகள் தின்று விட,
விமான நிலையத்தின் உள்ளே செல்லும்போது உடல் தளர்ந்து விட விமானத்தில் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது.

அதே வேளையில் அவரது உடல் பாதிக்கப்பட எனது உடன் பிறவா சகோதரன் தாழையூத்து கண்ணன் நமக்கு தகவல் கொடுக்க உடனடியாக சஃபா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவரோ உடல் நிலையை பார்த்து பதறி அவசர பிரிவில் சேர்க்க குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தால், நீங்கள் இங்கு கொண்டு வந்து சேர்க்கா விட்டால் இவரது உயிர் போயிருக்கும் என்றார்.

இறைவனின் அருளால் உங்களின் உதவியால்
நல்லவேளை அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என கண்ணனிடம் மருத்துவர் தெரிவித்தார்.

இவர் பூரண குணமடைந்து தாயகம் செல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

Advertisement

Close