தரகர் தெரு இளைஞர்களின் கோரிக்கையை தட்டிக் களிக்கும் அதிரை பேரூராட்சி நிர்வாகம்!

அதிரை 10வது வார்டு ஹாஜா நகரில் இருந்து தரகர் தெரு மைதானத்திற்கு வரும் பாதையில் கடந்த 1 மாதமாக குடி தண்ணீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக சென்று வருகிறது .அந்த தண்ணீர் சாலையில் தேங்கி கிடப்பதால் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

இது குறித்து தரகர் தெரு இளைஞர் ஒருவர் நம்மிடம் கூறுகையில்: 
அதிரை ஹாஜா நகரில் இருந்து தரகர் தெரு மைதானத்திற்கு வரும் பாதையில் கடந்த 1 மாதமாக குடி தண்ணீர் குழாய் உடைந்து ஓடுகிறது   இதை பற்றி 10வது வார்டு கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியும் இது வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.எங்கள் கோரிக்கையை தட்டி கழித்து தான் வருகிறார்கள்.இன்று காலை மீண்டும் பேரூராட்சி அலுவலகம் சென்று கூறி உள்ளோம் நடவடிக்கை எடுப்பார்களா என்று பார்ப்போம் என்றார். 

 

Advertisement

Close